தேர்தல் வன்முறை சம்பவங்கள் மிகவேகமாக அதிகரிப்பு – கஃபே

Written by vinni   // March 21, 2014   //

images (1)எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருக்கின்ற மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கான தேர்தல் வன்முறை சம்பவங்கள் மிகவேகமாக அதிகரித்துள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்(கபே) தெரிவித்துள்ளது.

கபே அமைப்பிற்கு வியாழக்கிழமை வரையிலும் 946 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் மேல் மாகாணத்திலிருந்தே 551 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அவ்வமைப்பு  சுட்டிக்காட்டியுள்ளது.

பொது சொத்துக்களை தேர்தலுக்காக பயன்படுத்தியமை தொடர்பில் 345 முறைப்பாடுகளும் வன்முறைகள் தொடர்பில் 483 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. இந்த வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வமைப்பு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Similar posts

Comments are closed.