இலங்கைக்கு எதிராக இங்கிலாந்தின் மற்றுமொரு அறிக்கை

Written by vinni   // March 21, 2014   //

13261-450x1882009ஆம் ஆண்டின் பின்னர், இலங்கைத் தமிழர்கள் பாலியல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு இங்கிலாந்து மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் 40பேரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்முகப் பரீட்சையின் போது பெறப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்ட நிலையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று தி கார்டியன் செய்திச்சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்து கோரிச் சென்ற இலங்கைத் தமிழர்கள், மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதன் பின்னர் பல்வேறு ன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மேற்குலக நாடுகள் ஒன்றிணைந்தே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதேபோன்று, தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அருட்தந்தையான டெஸ்மண்ட் டுட்டுவின் கருத்தும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை 110 பக்கங்களைக் கொண்டமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.