ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெறும் – ரோஹித்த அபேகுணவர்தன

Written by vinni   // March 21, 2014   //

imagesஅடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.

அந்த தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இலகு வெற்றியீட்டுவார்.

ஜனாதிபதி மஹிந்தவை மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக்க உயிரைக் கொடுத்து முயற்சிப்போம்.

வேறும் ஒருவர் ஜனாதிபதி ஆகக் கூடிய சாத்தியம் தற்போதைக்கு கிடையாது.

நாட்டின் ஜனாதிபதி ஆகக்கூடிய தகுதியுடைய எவரும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.