இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு

Written by vinni   // March 21, 2014   //

sri-lanka-india-flagஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் நடைபெற்று வரும் 25ம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில், பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற உள்ளது.

இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் எனவும், இலங்கைக்கு எதிராகவே வாக்களிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது,ஆளும் காங்கிரஸ் கூட்டணி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 28ம் திகதி ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.இதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களுக்கும் இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.உத்தேச தீர்மானத்தை ஆராய்ந்ததன் பின்னரே இறுதி;த் தீர்மானம் எடுக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இம்முறை தீர்மானத்தில் 13ம் திருத்தச் சட்டம் பற்றிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்தியா அதற்கு ஆதரவாக வாக்களிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.ராஜதந்திர ரீதியிலும் அரசியல் ரீதியிலும் கவனம் செலுத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்;ளதாகக் குறிப்பிடப்படுகிறது.


Similar posts

Comments are closed.