வழக்கின் மூலம் வடமாகாணத்தின் அதிகாரங்கள் குறித்த உண்மைகள் வெளிவரும்! சீ.வி.விக்னேஸ்வரன்

Written by vinni   // March 20, 2014   //

vikதனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மூலம் வடமாகாண ஆளுநருக்கும், வடமாகாண பிரதம செயலாளருக்கும் என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்ற உண்மைத் தகவல்கள் வெளிவரும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சரினால் தனக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதம செயலாளர் விஜயலக்சுமி ரமேஸினால் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

13வது திருத்தச் சட்டம் ஒழுங்கான முறையில் அமுல்படுத்தப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த சட்டத்தின் பிரகாரம் வடமாகாண ஆளுநருக்கும் வடமாகாண பிரதம செயலாளருக்கும் என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்ற உண்மைத் தகவல்கள் வழக்கு தாக்கல் செய்ததன் மூலம் வெளிவரவுள்ளன.

வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதையே நான் விரும்புகின்றேன். இவ்வாறான வழக்கு எனக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது என்றும் வடமாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வட மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கான அம்பியுலன்ஸ் வண்டிகள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, முதலமைச்சர் தனது கருத்தினை வெளியிட்டார்.


Similar posts

Comments are closed.