சந்திரிக்காவை சந்திக்க மஹிந்த இணக்கம்

Written by vinni   // March 20, 2014   //

santhirikaமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்திக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இணக்கம் வெளியிட்டுள்ளார்.

நாட்டின் மத ஒற்றுமை தொடர்பில் பேச்சு நடத்த சந்தர்ப்பம் தருமாறு சந்திரிக்கா விடுத்த வேண்டுகோளுக்கே ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.

முதல் வேண்டுகோளுக்கு ஜனாதிபதி இணங்காத போதும் இரண்டாம் முறை விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கே மஹிந்த இணக்கம் வெளியிட்டுள்ளார்.

முதல் தடவையாக சந்திரிக்கா ஜனாதிபதியின் செயலாளர் மூலமே சந்திக்கும் வாய்ப்புக்கான வேண்டுகோளை விடுத்திருந்தார்.

எனினும் அந்த வேண்டுகோள் கடிதம் தமக்கு கிடைக்கவில்லை என்று ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து சந்திரிக்கா குமாரதுங்க தமது வேண்டுகோளை ஜனாதிபதிக்கு நேரடியாக அனுப்பியிருந்தார்.


Similar posts

Comments are closed.