நான் தவறிழைத்துவிட்டேன் – பசில் ராஜபக்ஷ

Written by vinni   // March 20, 2014   //

pasilதாம் தவறிழைத்துவிட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேல் மாகாணசபையின் முதலமைச்சர் பதவி குறித்து எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிட்டிருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.மேல் மாகாண முதலமைச்சராக பிரசன்ன ரணதுங்கவே மீண்டும் தெரிவு செய்யப்படுவார் என அண்மையில் பிரச்சாரக் கூட்டமொன்றில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.இந்த கருத்து கட்சி வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களிலும் இவ்வாறு முதலமைச்சர் பற்றிய தகவல்களை வெளியிட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.எனினும், கொழும்பு வாழ் மக்கள் தமது ஊகத்தை சரியானது என நிரூபிப்பார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் கொழும்பு மாவட்ட கூட்டணியின் தலைமை வேட்பாளராக உதய கம்மன்பிலவை நியமிக்க தாம் எடுத்த தீர்மானத்திற்கு அனைவரும் ஆதரவளித்தார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், சில தீய சக்திகள் இதனை பிழையாக பிரச்சாரம் செய்ய முயற்சித்ததாகத் தெரிவித்துள்ளார்.பிரபாகரன் ஆயுதங்களின் மூலம் செய்ய முயற்சித்தவற்றை சிலர் வேறும் வழிகளில் முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.


Similar posts

Comments are closed.