காணாமல் போன விமானத்தின் இரு பொருட்கள் கண்டுபிடிப்பு

Written by vinni   // March 20, 2014   //

Malaysian-planeமாயமாகியுள்ள மலேசியன் எயார்லைன்ஸ் விமானத்தினது என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பொருட்கள், செயற்கைக் கோளின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு பொருட்களுக்கும் மாயமான மலேசிய விமானத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று அவுஸ்திரேலிய பிரதமர் டொனி ஆபொட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கூறுகையில்,

‘மலேசிய விமானம் மாயமாகி இரண்டு வாரங்கள் கழித்து புதியது மற்றும் நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது. இரண்டு பொருட்கள் கிடைத்துள்ளன. அதற்கும் மாயமான விமானத்திற்கும் தொடர்பு இருக்கலாம்.

அவுஸ்திரேலிய விமானப் படையான ஆரியன் அந்த பொருட்களை பார்க்க 3 கண்காணிப்பு விமானங்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

இருப்பினும், இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இரு பொருட்களும் எவை?, அவை எங்கு காணப்பட்டன என்பதை அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவிக்கவில்லை.

இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விமானத்தை தேடும் பொறுப்பை அவுஸ்திரேலியா ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கூறுகையில்,

‘விமானம் தொடர்பான தேடலுடன் தொடர்புடைய தகவல் செயற்கைக்கோள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு கிடைத்துள்ளது.

விஞ்ஞானிகள் அந்த செயற்கைக்கோள் புகைப்படத்தை ஆய்வு செய்து விமானத் தேடலுடன் தொடர்புடைய பொருட்கள் இரண்டு காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதை வைத்து உடனே எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது என்று மலேசிய பிரதமர் கூறியுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி 239 பயணிகளுடன் மலேசியாவிலிருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்ட விமானம் காணாமல் போயுள்ளது.


Similar posts

Comments are closed.