அத்துமீறும் இந்திய படகுகளை அரச உடைமையாக்க தீர்மானம்

Written by vinni   // March 20, 2014   //

2251848-a-small-wooden-boat-anchored-in-the-bayஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்க தீர்மானித்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர்.

இவர்களின் அத்துமீறிய மீன்பிடித்தலைத் தடுக்கும் வகையில், எதிர்வரும் காலங்களில் அவர்களின் படகுகளை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.


Similar posts

Comments are closed.