சுவையுடன் சுகம் தரும் பிளம்ஸ்!

Written by vinni   // March 20, 2014   //

plums_002நமது நாட்டில் மலைப்பகுதிகளில் அதிகம் விளையும் பழங்களில் ஓன்று பிளம்ஸ்.

நல்ல சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும் இந்த பழம் இனிப்பு, புளிப்பு என இரண்டும் கலந்த சுவையுடன் இருக்கும்.

மனிதனின் செயல்பாட்டிற்கு இதயம் முக்கிய பங்காற்றுகிறது. நிமிடத்திற்கு 72முறை சுருங்கி விரியக்கூடிய இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலுக்கு தேவையான ரத்தத்தை சுத்தப்படுத்தி மற்ற பாகங்களுக்கு அனுப்ப முடியும்.

சில நேரங்களில் இதன் செயல்பாடு அதிகமாகவும் சில நேரங்களில் குறைவாகவும் காணப்படும். கோபம், பயம் போன்ற காரணங்களால் இதயமானது வேகமாக சுருங்கி விரிகிறது. இது இதயகோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது.

இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க பிளம்ஸ் பழங்களை சாப்பிடலாம்.


Similar posts

Comments are closed.