5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி

Written by vinni   // March 20, 2014   //

zimbabwe_netherland_002நெதர்லாந்து அணிக்கு எதிரான உலக கிண்ண போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.

வங்கதேசத்தில் டுவென்டி-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

இத்தொடரின் இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே- நெதர்லாந்து அணிகள் மோதின.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்கள் எடுத்தது, இவ்வணியின் TLW கூப்பர் அதிகபட்சமாக 72 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி பொறுமையாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தது.

இறுதி வரை விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தின் முடிவில், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

இந்த அணியின் டெய்லர் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.


Similar posts

Comments are closed.