தீவிர பயிற்சியில் ஷேவாக்

Written by vinni   // March 20, 2014   //

sehwag002இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்திர ஷேவாக் பார்ம் இழந்ததால், வாய்ப்பின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்.
ஒருகாலத்தில் எதிர் அணியினரின் பந்தை துவம்சம் செய்தவர் ஷேவாக்.

டெஸ்ட் அரங்கில் பாகிஸ்தான், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முச்சதம் அடித்தார், ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசினார்.

இப்படி பல சாதனைகள் படைத்தவர், பார்ம் இழந்ததால் வாய்ப்பின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்.

உள்ளூர் போட்டிகளிலும் கூட ஓட்டங்கள் எடுக்கத் தவறியதால், ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி புறக்கணித்தது.

இந்நிலையில் தனது எதிர்காலம் குறித்து ஷேவாக் கூறுகையில், இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாடக்கூடிய திறமை என்னிடம் உள்ளது. தற்போது பிரிமியர் தொடரில் சிறப்பாக விளையாடி, பஞ்சாப் அணிக்கு பட்டம் பெற்று தருவதை இலக்காக கொண்டுள்ளேன்.

தவிர, உடற்தகுதியிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். பந்துவீச்சை துல்லியமாக கணித்து விளையாடுவதற்காக தினமும் பல மணி நேரம் பயற்சி மேற்கொள்கிறேன்.

வருகிற 2015ம் ஆண்டில் நடக்கும் உலக கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கலாம், பங்கேற்காமலும் போகலாம், எனினும் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடி வருவதாக தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.