சிறுமியை பதம்பார்த்த நாய்கள்

Written by vinni   // March 20, 2014   //

dog_cat_001கனடாவில் இரு நாய்களால் கடித்துக்குதறப்பட்டு 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கனடாவின் வின்னிபேக் மாகாணத்தில் 7 வயது சிறுமி, கடந்த 16ம் திகதி குடும்ப நண்பர்கள் வளர்க்கும் இரண்டு அலாஸ்கா நாய்களால் கடித்துக் குதறப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பொலிசார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்கு முன்பே உயிர் பிரிந்துள்ளார் என்றும், அச்சிறுமி அவரது குடும்ப நண்பர்களின் வீட்டிலிருந்த போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவ்விரண்டு அலாஸ்கா நாய்களையும் விலங்கு கட்டுப்பாடு பிடித்து சென்றுள்ளது.

மேலும் இச்சிறுமி செயிண்ட் ஆன்ட்ரூஸ் பகுதியை சேர்ந்தவர் என்பதை தவிர வேறு விவரங்கள் ஒன்றையும் பொலிசார் வெளியிடவில்லை.


Similar posts

Comments are closed.