முன்பதிவில் புரட்சியை ஏற்படுத்தியது Nokia X

Written by vinni   // March 15, 2014   //

nokia-x_001Nokia நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தனது முதலாவது கைப்பேசியான Nokia X விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்நிலையில் இதற்கான முன்பதிவுகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.

ஒரே நாளில் சீனாவில் மட்டும் 1 மில்லியன் வரையானவர்கள் முன்பதிவு செய்து கைப்பேசி சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இம்மாதம் 25ம் திகதி அறிமுகமாகவுள்ள இக்கைப்பேசியானது 4 அங்குல அளவுடைய தொடுதிரை, 1GHz வேகம் கொண்ட Processor, 512 MB RAM, 4 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவற்றுடன் 3 மெகாபிக்சல்களை உடைய கமெராவும் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.