T20 உலக கிண்ணம்: டோனியின் நம்பிக்கை

Written by vinni   // March 15, 2014   //

india_srilanka_asian_007இந்திய கிரிக்கெட் அணி கடந்த 5 மாதங்களாக சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால், ஐ.பி.எல். அனுபவம் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்று இந்திய அணித் தலைவர் டோனி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியா கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராஜ்கோட்டில் நடந்த ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவுடன் 20 ஓவர் போட்டியில் விளையாடியது. ஆனால், இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் பெரும்பாலான அணிகள் கடந்த சில மாதங்களில் சர்வதேச போட்டிகளில் விளையாடி பயிற்சி பெற்றுள்ளனர்.

வங்காளதேசத்தின் மிர்புரில் நாளை 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இந்திய அணித்தலைவர்,

நாங்கள் ஏராளமான 20 ஓவர் போட்டிகளில் விளையாடியிருக்கிறோம். அது சர்வதேச போட்டிகள் இல்லை என்று கூறலாம். ஏராளமான ஐபிஎல் போட்டிகளில் அனைத்து வீரர்களும் விளையாடியிருக்கின்றனர்.

வங்காளதேசத்தில் உள்ள ஆடுகளத்தின் தன்மைகள் இந்திய ஆடுகளங்களின் தன்மையை ஒத்துள்ளன. அதனால் ஐபிஎல் அனுபவம் எங்களுக்கு உதவியாக இருக்கும்.

உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கும் முன்பாக, இலங்கையுடன் 17ம் திகதியும், இங்கிலாந்துடன் 19ம் திகதியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளோம். இத்தொடரில் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியமானதுதான். எனவே அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடவேண்டும் என டோனி தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.