எனக்கு எந்த கடிதங்களையும் சந்திரிக்கா அனுப்பவில்லை – ஜனாதிபதி

Written by vinni   // March 15, 2014   //

chandrika-mahida_CIமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமக்கு எந்தவிதமான கடிதங்களையும் அனுப்பி வைக்கவில்லை என தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தம்மை சந்திப்பதற்காக நேரத்தை ஒதுக்குமாறு கோரியதாக சந்திரிக்கா ஊடகங்களில் தெரிவித்த போதிலும், அவ்வாறான கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அலரி மாளிகையில் அமைச்சர்கள் சிலருடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியை சந்திக்க ஆர்வமாக இருக்கின்றேன் என தெரிவித்து சந்திரிக்கா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.