பெண்ணிடம் இருந்து பெண்ணுக்கு பரவிய எய்ட்ஸ்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்

Written by vinni   // March 15, 2014   //

hiv-aids_3அமெரிக்காவில் மிகவும் வினோதமான முறையில் பெண்ணிடம் இருந்து பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகையே ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும் நோய் தான் எய்ட்ஸ், பலருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் ஆண் மற்றும் பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் பெண்ணிடம் இருந்து பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது அங்குள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை மையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

எய்ட்ஸ் நோய் பாதித்த பெண்ணுக்கு திடீரென தொண்டை வலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம், வீக்கத்துடன் கூடிய வேதனை, வறட்டு இருமல், தொடர்ந்து வயிற்றோட்டம், தசை வீக்கம் போன்றவை ஏற்பட்டது.

இதற்காக சிகிச்சை மேற்கொண்ட போது தான், எய்ட்ஸ் நோய் கிருமி தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் தன்னுடைய பெண் நண்பருடன் மட்டுமே பாலியல் உறவு வைத்திருந்தார், இந்நிலையில் நோய் கிருமி எப்படி தாக்கியது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.


Similar posts

Comments are closed.