கட்டாய கருக்கலைப்பு! கர்ப்பிணி பெண்ணை காதலனே கடத்திய கொடூரம்

Written by vinni   // March 15, 2014   //

9child_pregnent_001பிரான்சை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவர், அவளது காதலன் குடும்பத்தினரால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவர் தனது பெற்றோரின் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் இவளை கடந்த 11ம் திகதி, அவளது காதலன் குடும்பத்தினர் கடத்தி சென்றுள்ளனர்.

ஆறு மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், கட்டாயமாக கருக்கலைப்பு செய்வதற்காக ஸ்பெயினுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது, திடீரென காரில் பெட்ரோல் தீர்ந்துவிடவே, நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தியுள்ளனர்.

அந்த வேளையில் மறைத்து வைத்திருந்த செல்போனின் மூலம், குறித்த பெண் தனது தாயை தொடர்பு கொண்டு கார்களின் அடையாளங்கள் குறித்து தகவல் அளித்துள்ளார்.

உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், பிரான்ஸ்- ஸ்பெயின் எல்லையில் வைத்து கார்களை மடக்கி பிடித்தனர்.

கர்ப்பிணி பெண்ணை மீட்டதுடன், காதலன், அவனது அக்கா மற்றும் தம்பியை கைது செய்தனர்.

காதலன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், இதற்கு தனது குடும்பத்தினரின் டார்ச்சரே காரணம் என தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.