Gionee Elife S5.5 கைப்பேசி விரைவில் அறிமுகம்

Written by vinni   // March 13, 2014   //

gionee_slim_001மிகவும் மெலிதான கைப்பேசியாக கருதப்படும் Gionee Elife S5.5 ஆனது இம்மாதம் 18ம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

5.5 மில்லி மீற்றர்களே தடிப்புடைய இக்கைப்பேசியானது 5 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 1.7GHZ Octa Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளன.

மேலும் 16GB சேமிப்பு கொள்ளளவினைக் கொண்டுள்ளதுடன், 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.

இதன் விலையானது 374 அமெரிக்க டொலர்கள் ஆகும்.


Similar posts

Comments are closed.