முகமூடி அணிந்திருந்த இரண்டு திருடர்களிடமிருந்து கடைக்காரர் ஒருவர் தன்னை மிகவும் தந்திரமாக காப்பாற்றிக் கொண்டுள்ளார்.ரொக்கர் சாலையில் ராசரத்தினம் ராகுலன் என்பவரின் கடையில் நுழைந்த திருடர்கள், அங்குள்ள பணத்தை கேட்டு அச்சுறுத்தியுள்ளனர்.ஆனால் ராகுலன் பணம் கொடுக்க மறுத்ததால் தானே பணப்பெட்டியினை திறந்து அதனுள் இருந்த பணத்தை தங்களின் பையினுள் இடுமாறு திருடர்கள் மீண்டும் அவரை அச்சுறுத்தினார்கள்.அச்சமயம் சுதாரித்துக் கொண்ட ராகுலன் அவர்களை நில துடைப்பான் பிடியினால் திருடர்களை தாக்கினார். இச்சம்பவம் சிசிடிவி புகைப்பட கருவியில் பதிவாகியுள்ளது. இக்காட்சிகளின் அடிப்படையிலேயே ஞாயிறு இரவு கடையினுள் உட்புகுந்த திருடர்களை அடையாளம் காணும் செயற்பாடுகள் நடைப்பெறுகின்றது.கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த கடையில் இது இரண்டாவது திருட்டுச் சம்பவமாகும்.இந்தத் திருட்டு குறித்து கடை உரிமையாளர் கூறுகையில், திருடர்கள் கேட்டவுடன் பணத்தை தூக்கி கொடுத்துவிட முடியாது. நாங்கள் பணம் சம்பாதிப்பதற்கு கடினமாக உழைக்கின்றோம்.திருடர்கள் புகுந்ததும் நான் சுதாரித்துக் கொண்டு கதவை மூடிவிட்டேன். ஆனால் இந்த திருடர்களின் வயது 17 – 18 ஆக இருக்க வேண்டும். இவர்கள் எங்களது கடையின் வாடிக்கையாளர்களாகவே இருக்க வேண்டும். எது எப்படியே அவர்களால் இங்கிருந்து ஒன்றையும் கொண்டுச் செல்ல இயலவில்லையென ராகுலன் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் குறித்து நோர்த்ஹம்பிரியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கின்றார்கள்.

Written by vinni   // March 13, 2014   //

theft_beat_001.w245முகமூடி அணிந்திருந்த இரண்டு திருடர்களிடமிருந்து கடைக்காரர் ஒருவர் தன்னை மிகவும் தந்திரமாக காப்பாற்றிக் கொண்டுள்ளார்.

ரொக்கர் சாலையில் ராசரத்தினம் ராகுலன் என்பவரின் கடையில் நுழைந்த திருடர்கள், அங்குள்ள பணத்தை கேட்டு அச்சுறுத்தியுள்ளனர்.

ஆனால் ராகுலன் பணம் கொடுக்க மறுத்ததால் தானே பணப்பெட்டியினை திறந்து அதனுள் இருந்த பணத்தை தங்களின் பையினுள் இடுமாறு திருடர்கள் மீண்டும் அவரை அச்சுறுத்தினார்கள்.

அச்சமயம் சுதாரித்துக் கொண்ட ராகுலன் அவர்களை நில துடைப்பான் பிடியினால் திருடர்களை தாக்கினார். இச்சம்பவம் சிசிடிவி புகைப்பட கருவியில் பதிவாகியுள்ளது. இக்காட்சிகளின் அடிப்படையிலேயே ஞாயிறு இரவு கடையினுள் உட்புகுந்த திருடர்களை அடையாளம் காணும் செயற்பாடுகள் நடைப்பெறுகின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த கடையில் இது இரண்டாவது திருட்டுச் சம்பவமாகும்.

இந்தத் திருட்டு குறித்து கடை உரிமையாளர் கூறுகையில், திருடர்கள் கேட்டவுடன் பணத்தை தூக்கி கொடுத்துவிட முடியாது. நாங்கள் பணம் சம்பாதிப்பதற்கு கடினமாக உழைக்கின்றோம்.

திருடர்கள் புகுந்ததும் நான் சுதாரித்துக் கொண்டு கதவை மூடிவிட்டேன். ஆனால் இந்த திருடர்களின் வயது 17 – 18 ஆக இருக்க வேண்டும். இவர்கள் எங்களது கடையின் வாடிக்கையாளர்களாகவே இருக்க வேண்டும். எது எப்படியே அவர்களால் இங்கிருந்து ஒன்றையும் கொண்டுச் செல்ல இயலவில்லையென ராகுலன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து நோர்த்ஹம்பிரியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கின்றார்கள்.


Comments are closed.