இலங்கை தொடர்பில் விசாரணை நடத்த நவனீதம்பிள்ளைக்கு அதிகாரமில்லை: ரஷ்யா

Written by vinni   // March 13, 2014   //

navaneetham-pillai-5-380x270ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு, இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த அதிகாரம் கிடையாது என ரஷ்யாவும், சீனாவும் தெரிவித்துள்ளன.

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை குழுவொன்றை நியமிக்க நவனீதம்பிள்ளைக்கு அதிகாரம் கிடையாது.

இவ்வாறான விசாரணை நடாத்த அதிகாரம் இருந்தால் அது குறித்து அந்த அதிகாரங்களை சுட்டிக்காட்ட வேண்டும்.

மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு, சீனா, ரஸ்யா, கியூபா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆதரவளித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த ஆணைக்குழு அமைக்கும் அதிகாரம் நவனீதம்பிள்ளைக்கு காணப்படுவதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தீர்மானத்திற்கு அமைய சர்வதேச விசாரணை நடாத்த வேண்டுமென அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளர் நிமால்கா பெர்னாண்டோ மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் கோரியுள்ளனர்


Similar posts

Comments are closed.