வினோத நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி!

Written by vinni   // March 13, 2014   //

toddler_eats_003ஸ்காட்லாந்தை சேர்ந்த நான்கு வயது சிறுமி, வினோத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்காட்லாந்தில் சாரோலொடி என்ற 4 வயது சிறுமி வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், எப்போதும் தரைவிரிப்பு மற்றும் சோபா துணிகளை தின்று கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து இவரது தாயார் நிக்கி, தன் குழந்தையின் நிலையை காண மிகவும் வேதனையாய் உள்ளது என்றும், மிளகாய் போடி போன்ற காரமான பொருட்களை துணிகளில் வைத்தும் இப்பழக்கம் குழந்தையிடமிருந்து அகலவில்லை எனவும் கூறியுள்ளார்.

தன் அறை மற்றும் தனது சகோதரியின் அறையிலிக்கும் தரைவிரிப்புகளை தின்றது மட்டுமல்லாமல், தனது 1 வயதிலிருந்தே இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிக்கி மற்றும் அவரது கணவன் அலாசிடீரும் தெரிவித்துள்ளனர்.

இதே நிலை தொடர்ந்தால் சாரோலொடிக்கு அடிக்கடி வாந்தி ஏற்படுவதுடன், கால்கள் நொண்டும் அபாயம் உண்டாகலாம் என குழந்தை மருத்துவர் எச்சரித்துள்ளார்.


Similar posts

Comments are closed.