பொதுநலவாய தினத்தில் கலந்து கொள்ளாது ஒழிந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த: சிங்கள இணையத்தளம்

Written by vinni   // March 13, 2014   //

president-mahinda-rajapaksa-newsfirstஉலக தலைவராகும் நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டின் தேசிய நிதியை விரயம் செய்து தன்னை பொதுநலவாய நாடுகளில் தலைவராக்கி கொண்ட போதும், லண்டனில் 11ம் திகதி நடைபெற்ற பொதுநலவாய தினத்தில் கலந்து கொள்ள முடியாத நிலைமையை எதிர்நோக்கியதாக தெரியவருகிறது.

பொதுநலவாயத்தின் நடப்பு தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லண்டன் நிகழ்வில் பங்கேற்க வேண்டியது கட்டாயமாகும்.

எனினும் லண்டனில் ஏற்படும் அசௌகரியங்களை எதிர்நோக்க முடியாது அவர் ஓடி ஒழிந்து கொண்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

லண்டனில் 11 ஆம் திகதி நடைபெற்ற பொதுநலவாய தினத்தில் 53 நாடுகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டியது சம்பிரதாயமானது.

பொதுநலவாய அமைப்பின் தலைவர் பதவியை வகிக்கும் இலங்கையின் தலைவர் அதில் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயமானது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மாத்திரம் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி கலந்து கொள்ளாமைக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பீரிஸூக்கும் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இதற்கு முன்னர் இரண்டு முறை தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வாழும் புலம்பெயர் தமிழர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

ஆனால் இம்முறை உத்தியோகபூர்வமான அரச விருந்தாளியாக லண்டனுக்கு செல்ல சந்தர்ப்பம் இருந்த போதும் கூட அவர் அதனை எதிர்கொள்ள முடியாது ஒழிந்து கொண்டார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தினத்தில் கலந்து கொள்ளாதது குறித்து கருத்து வெளியிட்ட பிரித்தானிய அரசியல் விமர்சகர் ஒருவர், மகிந்த ராஜபக்ஷ வலுவற்ற சந்தர்ப்பவாதி அல்லாது அவர் நேர்மையானவராக இருந்தால் நிகழ்வில் கலந்து கொண்டிருக்க முடியும்.

அவர் கூறுவது போல் தான் சரியான நிலைப்பாட்டில் இருப்பார் எனில், பொதுநலவாய தினத்தில் கலந்து கொண்டு அதனை பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கம், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தவறு செய்கிறது என்பதை உலகத்திற்கு எடுத்துக் கூற சந்தப்பம் கிடைத்திருக்கும்.

எனினும் அவர் அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு அரசியல் ஆத்ம சக்தி இல்லாத வலுவற்ற அரசியல்வாதி என்பதை அவரது புறக்கணிப்பு காட்டுவதாக பிரித்தானிய அரசியல் விமர்சகர் கூறியதாக அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.