குடும்பத்தையே சிறைப்பிடித்த கோபக்கார பூனை

Written by vinni   // March 13, 2014   //

dog_family_arrest_003அமெரிக்காவில் பச்சிளம் குழந்தையை பிணைக் கைதியாக பிடித்ததன் மூலம், மொத்த குடும்பத்தையுமே கோபக்கார பூனை ஒன்று அறைக்குள் அடைத்து வைத்தது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த லீ பால்மர் என்பவர், கடந்த 4 ஆண்டுகளாக பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார், ரொம்ப கோபக்கார பூனையாம்.

சம்பவ தினத்தன்று தனது பூனைக்கு ஒரு உதை கொடுத்துள்ளார் லீ.

இதனால் கோபம் கொண்ட பூனை, லீயின் ஏழு மாத குழந்தையை தாக்க முயன்றுள்ளது.

உடனே பயந்து போன குடும்பத்தினர், குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.

அவர்களை அறையை விட்டு வெளியே வர முயற்சி செய்தாலே, குழந்தையை பூனை தாக்க சென்றுள்ளது.

தொடர்ந்து 911க்கு போன்று செய்த லீ, பொலிசின் உதவியை நாடியுள்ளார்.

விரைந்து வந்த பொலிசார் குழந்தையையும், குடும்பத்தினரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.


Similar posts

Comments are closed.