சொர்க்கத்தின் மறுபெயர் அல்பேட்டா

Written by vinni   // March 13, 2014   //

alberta_003கனடாவில் அல்பேட்டா மாகாணம் தான் வாழ்வதற்கு மிகச்சிறப்பான இடம் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

கனடாவில் கடந்த 2013ம் ஆண்டில் MoneySense என்ற வார இதழ் வாழ்வதற்கு சிறந்த இடம் குறித்து ஆய்வு நடத்தியது.

குறிப்பாக மக்களின் வாழ்க்கை தரம், வருமானம், வேலை வாய்ப்பு, காலநிலை மற்றும் சமூகத்தில் அரங்கேறும் குற்றங்கள் போன்ற காரணங்களை அடிப்படையாக கொண்டு இவ்வாய்வு சுமார் 201 நகரங்களில் நடத்தப்பட்டது.

இதில் வாழ்வதற்கு சிறந்த நகரமாக அல்பேட்டா நகரம் தெரிவாகியுள்ளது.

ஏனெனில் அல்பேட்டா பெருளாதார ரீதியாக பலமுடையாதாய் உள்ளது என்றும், அதிக ஊதியமுடைய பல்வேறு தொழில்கள் இங்கு குவிந்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இங்கு குடும்ப சூழலும், நட்பு வட்டாரமும் நல்ல விதத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.