ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு திடீர் மிரட்டல்

Written by vinni   // March 13, 2014   //

facebook_logoஅமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியா நகரின் மென்லோ பார்க் பகுதியில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு நேற்றிரவு திடீர் என்று ஓர் மிரட்டல் அழைப்பு வந்தது.

இதனையடுத்து, சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் அந்த அலுவலகத்தை மென்லோ பார்க் போலீசார் சுற்றி வளைத்தனர். யாரையும் வெளியே போக அனுமதிக்காத போலீசார் அனைத்து நுழைவாயில்களையும் பூட்டினர்.

உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 7 மணியிலிருந்து 8.30 வரை போலீசார் நடத்திய சோதனையில் விடுக்கப்பட்டது போலி மிரட்டல் என்பது தெரிய வந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு பரபரப்பு நிலவியது


Similar posts

Comments are closed.