புகைப்பிடித்துக் கொண்டு மிக ஜாலியாக பேசினார் விமானி

Written by vinni   // March 12, 2014   //

missing_plane_passanger_002காணாமல் போன மலேசிய விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி, புகைப்பிடித்துக் கொண்டு மிக ஜாலியாக பேசினார் என இளம்பெண் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

மலேசியாவிலிருந்து புறப்பட்ட விமானம் கடந்த 7ம் திகதி நள்ளிரவு மாயமானது, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா அல்லது விபத்தில் சிக்கியதா என பல கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த விமானத்தை ஓட்டிச் சென்றவர் அப்துல் ஹமீது.

இந்நிலையில் இவர் பற்றி புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜோந்தி ரோஸ் என்ற இளம்பெண்ணும், இவரது தோழியும் கடந்த 2011ம் ஆண்டு கோலாலம்பூர் செல்லும் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது விமான ஓட்டி அப்துல் ஹமீது என்பவர், பைலட்டுகள் அறையிலிருந்து பயணிக்க விருப்பமா என ரோஸிடம் கேட்டுள்ளார்.

உடனே சம்மதம் தெரிவித்த அப்பெண்ணை, விமானத்தின் பைலட்டுகள் அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மிக ஜாலியாக பேசியதுடன், புகைப்பிடித்துக் கொண்டு விமானம் முழுவதையும் சுற்றிக் காட்டியுள்ளார்.

எங்களுடன் நண்பர்கள் போன்று பேசினார், ரோஸ் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

நண்பர் ஹமீது ஓட்டி சென்ற விமானம் மாயமாகியது குறித்து கேள்விபட்டதும் எனது இதயம் வெடித்துவிட்டது.

அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.