நவிபிள்ளைக்கு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து தெரியப்படுத்தினோம்: முஸ்லிம் காங்கிரஸ்

Written by vinni   // March 12, 2014   //

South African Navanethem Pillay, U.N. High Commissioner for Human Rights, speaks during a press conference at the European headquarters of the United Nations in Geneva, Switzerland, Thursday, June 30, 2011. Pillay told reporters she was இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு தெரியப்படுத்தியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

முஸ்லிம் மக்கள் மற்றும் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தளங்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்த தகவல்களை தெரியப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் இயங்கி வரும் சில கடும்போக்குடைய அமைப்புக்கள் இந்த தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த தாக்குதல்கள் அடக்குமுறைகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், ஆளும் கட்சிக்கு வழங்கி வரும் ஆதரவினை விலக்கிக்கொள்ள தீர்மானிக்கவில்லை னஎ தெரிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.