இலங்கையில் கொலைகளை செய்து பொறுப்பை அரசாங்கத்தின் மீது சுமத்தும்அமெரிக்கா – விமல் வீரவன்ஸ

Written by vinni   // March 12, 2014   //

vimal_weerawansa_TC_0404இலங்கையில் கொலைகளை செய்து அதற்கான பொறுப்பை அரசாங்கத்தின் மீது சுமத்த, அமெரிக்கா முயற்சித்து வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்குள் மக்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து அதில் தமது ஆட்களை புகுத்தி கண்டுப்பிடிக்க முடியாதபடி கொலைகளை செய்து அந்த கொலைகளுக்கான பொறுப்பை அரசாங்கத்தின் மீது சுமத்த அமெரிக்க முயற்சித்து வருகிறது.

பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய அதிகாரிகளை பயன்படுத்தி அமெரிக்கா, இலங்கைக்குள் இந்த மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள உள்ளது.

மாகாண சபைத் தேர்தலை கண்காணிக்க கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் புலனாய்வு துறைகளுக்கு பயன்படுத்தும் கெமரா கட்டமைப்பையும், புதிய உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

வெனிசூலாவை ஸ்திரமற்ற நிலைமைக்கு உள்ள அமெரிக்க பயன்படுத்திய வேலைத்திட்டத்தை இலங்கையிலும் அந்நாடு அரங்கேற்றி வருகிறது.

அதேவேளை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் வடக்கு மாகாணத்திற்கு இடைக்கால நிர்வாகத்தை வழங்குமாறு ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு யோசனை முன்வைத்துள்ளார்.

பெரும்பான்மை சிங்கள ஆட்சியாளர்களிடம் தாம் துன்பப்படுவதாக ஆயர் கூறியுள்ளார்.

ஆயர் வெறுமனே இந்த யோசனையை முன்வைக்கவில்லை. அதுதான் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை.

போர் குற்றங்கள் நடந்தன என்று ஜெனிவா மனித உரிமை பேரவை கூறுகிறது.

வடக்கில் இராணுவம் இருக்கின்றது இதனால் தமிழ் மக்களுக்கு தொந்தரவு கொடுக்கப்படுகிறது என்ற நிலைப்பாட்டை அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாதவற்றை இருப்பதாக காட்டி வருகிறது என்றும் அமைச்சர் விமல் வீரவன்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.