உக்ரேய்னில் பிரச்சினைகள் ஏற்படக்காரணம் ,மேற்குலக நாடுகளின் தேவையற்ற தலையீடுகளே! – அரசாங்கம்

Written by vinni   // March 12, 2014   //

srilanka flgமேற்குலக நாடுகளின் தேவையற்ற தலையீடுகளே உக்ரேய்னில் பிரச்சினைகள் ஏற்படக் காரணம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு மக்களை பயன்படுத்தி உக்ரேய்னில் கிளர்ச்சியை ஏற்படுத்த மேற்குலக நாடுகள் முயற்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.

பொறுப்புணர்ச்சியற்ற மேற்குலக நாடுகளின் நடவடிக்கைகளே உக்ரேய்னில் கலவரங்கள் ஏற்படக் காரணம் என தெரிவித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் முனைப்புக்களில் மேற்குலக நாடுகள் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.லிபியா, சிரியா போன்ற நாடுகளில் ஏற்பட்டதனைப் போன்று உக்ரேய்னிலும் குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

வன்முறைகள் மற்றும் முரண்பாடுகளை களைவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் உக்ரேய்ன் மக்களிடம் கோரியுள்ளது.


Similar posts

Comments are closed.