2–வது திருமணம் செய்ய மனைவி அனுமதி தேவையில்லை

Written by vinni   // March 12, 2014   //

pakistan marriages - AFPபாகிஸ்தானில் 2–வது திருமணம் செய்ய மனைவி அனுமதி தேவையில்லை’ என்று இஸ்லாமிய சட்ட அமைப்பு வலியுத்தி உள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு இஸ்லாமிய சட்டங்கள் கடைபிடிக்கபடவில்லை. நம் நாட்டை போன்ற சட்டங்கள்தான் பின்பற்றப்படுகின்றன.

அங்கு முதல் மனைவி இருக்கும்போது 2–வது திருமணம் செய்வது சட்டத்துக்கு எதிரானது. அவ்வாறு திருமணம் செய்யும் பட்சத்தில் முதல் மனைவியிடம் கணவர் அனுமதி பெறவேண்டும்.

அதற்கு பாகிஸ்தானில் இஸ்லாமிய சட்ட கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதுகுறித்து அக்கவுன்சில் தலைவர் மவுலானா முகமது கான் கூறியதாவது:–

இஸ்லாமிய சட்டப்படி ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ளலாம். 2–வது திருமணம் செய்ய முதல் மனைவியின் அனுமதி தேவையில்லை. எனவே, பாகிஸ்தான் அரசு இதுதொடர்பாக சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும்.

இதுகுறித்து இஸ்லாமிய சட்ட மாநாட்டில் குடும்ப சட்டத்தின் அனைத்து பிரிவுகளையும் ஆராய்ந்து தேவையான மாற்றங்களை கொண்டு வர பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி வருகிறோம். மேலும் திருமணம், விவாகரத்து சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.