கடலில் விழுந்த விமானத்தின் துரும்பு கூட இதுவரை கிடைக்கவில்லை

Written by vinni   // March 12, 2014   //

140310152437_china_malaysia_plane_624_portuguese_35 நாட்களாக தேடியும் 239 பேருடன் கடலில் விழுந்த விமானத்தின் துரும்பு கூட இதுவரை கிடைக்கவில்லை.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு கடந்த 8-ந்தேதி சென்ற மலேசிய விமானம் திடீரென மாயமானது. அதில் பயணம் செய்த 239 பேர் கதி என்ன என்று தெரியவில்லை.

36 போர் விமானங்கள், 40 போர்க்கப்பல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான படகுகள் விமானத்தை தேடிவருகின்றன.

பொதுவாக விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானால் அதன் உடைந்த பாகங்கள் மீட்கப்படும். அதில் பயணம் செய்தவர்களின் உடல்கள் தண்ணீரில் மிதக்கும்.

ஆனால், விமானம் கடலில் கிடப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மேலும் விமானத்தின் சிறு துரும்பு கூட கிடைக்கவில்லை. இது விமான மீட்பு குழுவினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.