மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான பயணிகளின் உறவினர்கள் கோலாலம்பூர் பயணம்

Written by vinni   // March 12, 2014   //

620x334xMalaysia-Plane-01.jpg.pagespeed.ic.wi80Q3McW2மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டுச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சனிக்கிழமை அதிகாலை, தரைக்கட்டுப்பாட்டு தொடர்பை இழந்து மாயமானது.

அந்த விமானம் எங்கு விழுந்தது? அதில் பயணம் செய்த 154 சீனர்கள், 5 இந்தியர்கள் உள்ளிட்ட மொத்தம் 227 பயணிகளும், 12 ஊழியர்களும் என்ன ஆனார்கள்? என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தேடும் பணிக்காக 10 செயற்கைகோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், பயணிகளின் உறவினர்கள் கடந்த 3 நாட்களாக பீஜிங் விமான நிலையத்திற்கு வந்து கண்ணீர் மல்க காத்திருந்தனர். அவர்களை அங்குள்ள ஓட்டலில் தங்க வைத்திருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம், ஒரு குடும்பத்திற்கு தலா இருவர் வீதம் கோலாலம்பூருக்கு அழைத்துச் செல்லத் தொடங்கியது. முதற்கட்டமாக இன்று ஒரு குழுவினர் தனி விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்திய பயணிகளில் ஒருவரான சாம்வேத் கோலேகரின் தந்தை, தாய் மற்றும் சகோதரர், மற்றொரு இந்திய பயணியான பிரகலாத் ஷிர்ஷாத்தின் மனைவி ஆகியோரும் இந்த சிறப்பு விமானத்தில் கோலாலம்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் கப்பல்கள் மற்றும் விமானங்களை பயன்படுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.