சங்கக்காரவின் இடத்தில் திரிமான்னே

Written by vinni   // March 10, 2014   //

srilanka_paksitan_asiancup_final_021இலங்கை வீரர் சங்கக்கார ஓய்வுக்கு பின், அவரது இடத்தை திரிமான்னே நிரப்புவார் என இலங்கை அணியின் அணித்தலைவர் மாத்யூஸ் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் நடந்த ஆசிய கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதில் திரிமான்னே சதம் விளாசி கைகொடுத்தார்.

இதுகுறித்து மாத்யூஸ் கூறுகையில், அனுபவ வீரர்களான சங்கக்கார, ஜெயவர்தனாவின் ஓய்வுக்கு பின் இவர்களது இடத்தை முறையே திரிமான்னே, சண்டிமால் நிரப்புவார்கள்.

திரிமான்னேவை பொறுத்தவரை பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் களமிறங்கினாலும், ஓட்டங்கள் எடுக்கும் திறன் பெற்றவர்.

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த தொடரில் தில்ஷன் காயம் அடைந்தார்.

இதனால் ஆசிய கிண்ணப் போட்டியில் தொடக்க வீரர் வாய்ப்பு திரிமான்னேவுக்கு கிடைத்தது.

இதைப்பயன்படுத்திய இவர், இறுதிச்சுற்றில் வியக்கத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மலிங்கா பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், கிண்ணத்தை வென்றது கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.