ஆசிய நாடுகளே வெற்றி பெறும்: மிஸ்பா உல் ஹக்

Written by vinni   // March 10, 2014   //

misbah_ul_haq_001டுவென்டி-20 உலக கிண்ணத்தை ஆசிய நாடுகளே கைப்பற்றும் என பாகிஸ்தான் அணியின் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

டுவென்டி-20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத்தில் வருகிற 16ம் திகதி முதல் ஏப்ரல் 6ம் திகதி வரை நடக்கிறது.

இறுதிபோட்டியில் வெற்றி பெற்று, ஆசிய நாடுகள் கிண்ணத்தை கைப்பற்றும் என பாகிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டிக்கான அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆசிய கிண்ண போட்டிகள் வங்கதேசத்தில் நடந்து முடிந்தது, இங்குள்ள மைதானங்களில் விளையாடிய அனுபவம் ஆசிய நாடுகளுக்கு உள்ளது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, டுவென்டி- 20 ஓவர் உலக கிண்ணத்தை ஆசிய நாடுகள் வெல்லும்.

இங்குள்ள மைதானங்களில் இலங்கை, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு எதிராக விளையாடுவது சவாலானது.

20 ஓவர் உலக கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பில் 3 அல்லது 4 அணிகள் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே டுவென்டி-20 ஓவர் உலக கிண்ணத்தை வெல்ல தங்கள் அணிக்கு வாய்ப்பு இருப்பதாக கருதவில்லை என இலங்கை அணியின் அணித்தலைவர் மாத்யூஸ் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.