இங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி

Written by vinni   // March 10, 2014   //

west_indies_win_t20_005இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டியில் முதலாவது ஆட்டம் நேற்று நடந்தது.

முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களைப் பெற்றது. சாமுவேல்ஸ் 46 பந்தில் 69 ஓட்டங்களை கடந்தார் கிறிஸ் கெய்ல் 35 பந்தில் 43 ஓட்டங்களையும் விளாசினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் அந்த அணி 27 ஓட்டங்களினால் தோல்வி அடைந்தது.

பிரெஸ்னென் 29 பந்தில் 47 ஓட்டங்களையும் ரவி போபரா 24 பந்தில் 42 ஓட்டங்களையும் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக பத்ரி 3 விக்கெட்டும், சாமுவேல்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட தொடரில் மேற்கிந்திய தீவுகள் 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டி நாளை நடைபெறவுள்ளது.


Similar posts

Comments are closed.