இனி மூளையில் ஏற்படும் கட்டிகளை குணப்படுத்தலாம்: ஆய்வில் தகவல்

Written by vinni   // March 10, 2014   //

brain_tumourtreatment_002ஆன்டி-சைகாட்டிக் மருத்துவம் மூளை புற்று கட்டிகளை குணப்படுத்தும் முடிவும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டீகோ நகரில் அமைந்த கலிபோர்னிய பல்கலை கழகத்தின் நியூரோசர்ஜரி பிரிவின் துணை தலைவரும், ஆராய்ச்சி குழுவின் தலைவருமான மருத்துவர். கிளார்க் சி. சென் என்பவர் தலைமையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அதில், மூளையில் ஏற்படும் கட்டிகளை குணப்படுத்த தேவையான மருத்துவ முறைகள் குறித்து சில முடிவுகள் பெறப்பட்டு உள்ளன.

இதனால் மூளையில் ஏற்படும் புற்றுகட்டிகளை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உணவு மற்றும் மருத்துவ கழகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள ஆன்டி-சைகாட்டிக் மருந்துகள் (மனநலம் சிகிச்சைக்கு பயன்படும் மருந்துகள்) இத்தகைய தீங்கு தரும் மூளை புற்றுக்கட்டிகளை அவை வளர்வதற்கு முன்னதாக முளையிலேயே அழித்திடும் ஆற்றல் கொண்டவையாக உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென் கூறுகையில், மரபணுக்கள் பணி குறித்து ஆய்வு செய்வதற்கு உகந்த கருவியாக பயன்படுவது எஸ்.எச்.ஆர்.என்.ஏ. இவை மூலக்கூறு அழிப்பான்களாக செயல்படுகிறது.

எனவே, மனித மரபணு தொகுப்பில் உள்ள ஒவ்வொரு மரபணுவுக்கும் எதிராக இத்தகைய அழிப்பான்களை வடிவமைக்க முடியும் என்று நாங்கள் உறுதியுடன் கூறுகிறோம். இந்த எஸ்.எச்.ஆர்.என்.ஏ.க்களை வைரஸ் தொகுப்புகளாக மாற்றி அவற்றை புற்று செல்களில் ஒன்றிணைத்து விடுகிறோம்.

தற்பொழுது புற்று கட்டிகளை உருவாக்கும் செல்களை ஒரு மரபணு உற்பத்தி செய்ய முற்பட்டால் இந்த எஸ்.எச்.ஆர்.என்.ஏ.க்கள் அத்தகைய மரபணுவின் செயற்பாட்டை அழித்து விடுகிறது. இதனால், புற்று செல் வளர்வது நின்று விடும் அல்லது அது இறந்து விடும் என்று சென் கூறியுள்ளார். புற்று கட்டிகள் வளர்வதற்கு தேவையான மரபணுக்கள் டோபமைன் ரிசப்டார் இயக்கத்திற்கும் தேவையான ஒன்றாக உள்ளன.

டோபமைன் என்ற சிறிய மூலக்கூறு பொருள் நரம்பு செல்களால் வெளியிடப்படுகின்றன. அது சுற்றியுள்ள நரம்பு செல்களை இணைக்கும் செயலில் ஈடுபடுகிறது. இது செல் ஒன்றுடன் ஒன்று தொடர்பில் இருப்பதற்கு வழிவகுக்கிறது.

இத்தகைய ஆற்றல் மிக்க டோபமைன் பொருள் புற்று கட்டிகளுக்கு எதிரான தன்மையை கொண்டுள்ளதுடன் அவை வளர்ந்த செல்களின் மீதும் செயல்படும் தன்மை கொண்டதாக உள்ளது என்பதை சென் தனது குழுவினருடன் இணைந்து மேற்கொண்ட பரிசோதனை வழியாக உறுதி செய்துள்ளார்.

எனவே புற்றுக்கட்டிகள் வளர்ச்சியை நிறுத்துவதற்கு பயன்படும் மருந்துகளுடன் இணைந்து தங்களது ஆய்வு முடிவுகளை பயன்படுத்தி புற்றுக்கட்டிகள் வளர்ச்சியை தடுத்து நிறுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதனுடன் ஆச்சரியப்படத்தக்க விசயமாக, இந்த நோய்க்கு அளிக்கப்படும் மருந்துகளில் 90 சதவீதம் மூளைக்குள் செல்வதை தடுக்கும் வகையில் இயற்கையாக மனிதர்களிடம் உள்ளது.

அதனை தாண்டி தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவம் செயல்படுவது கண்டறியப்பட்டு உள்ளது என்று கலிபோர்னிய பல்கலை கழகத்தின் தலைவர் பாப் கார்டர் தெரிவித்துள்ளார்.

இதனால் மூளை புற்றுக்கட்டிகளை குணப்படுத்தும் முயற்சியில் மருத்துவ உலகில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது என்று சென் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.