வேலையைத் தூக்கியெறிந்த இளம் செய்தியாளர்…. நேரடி ஒளிபரப்பில் கூறியதால் பரபரப்பு!….

Written by vinni   // March 10, 2014   //

news_reader_001.w245உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் நேரடி ஒளிபரப்பில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவப் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா டுடே தொலைக்காட்சியின் லிஸ் வால் என்ற பெண் செய்தி வாசிப்பாளர் தன் பணியிலிருந்து நீங்க முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தி வாசிப்பாளர் கூறுகையில், இத்தொலைக்காட்சி ரஷ்யாவின் க்ரைமியா மீதான இராணுவ ஆதிக்கத்தை தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறது என்றும் ரஷ்ய அரசின் நிதி உதவியால் இயங்கப்படும் இவ்விடத்தில் இனிமேலும் தன்னால் தொடர்ந்து பணிபுரிய முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இச்செய்தி வாசிக்கப்பட்டு முடிந்ததும் இந்தத் தொலைக்காட்சியிலிருந்து, தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என செய்தி வாசிப்பின் போது கூறியுள்ளார்.

இவர் அறிவித்த ராஜினாமா வீடியோ காட்சி நேரடி ஒளிபரப்பால் உலகேங்கும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Comments are closed.