இலங்கை தமிழர்கள் தொடர்பில் இந்தியா – அமெரிக்கா இணக்கம்! போர்க்குற்றம் தொடர்பில் இணக்கமில்லை

Written by vinni   // March 10, 2014   //

Internally displaced people (IDP) wait for police to search their bus at a checkpoint on the A-9 road in Vavuniyaஇலங்கை உட்பட்ட பிராந்திய மற்றும் இருதரப்பு விடயங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் இணக்கங்களை வெளியிட்டுள்ளன. எனினும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் தடைகள் தொடர்வதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் உயர்தர அலுவலரான இராஜாங்க உதவி செயலாளர் நிஷா பிஷ்வால்ää இந்திய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினார்.

ஏற்கனவே இந்தியாவின் அமெரிக்காவுக்கான அலுவலர் தேவ்யானி கொராகேட் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் இந்திய – அமெரிக்க இராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே பிஷ்வாலின் விஜயம் கடந்த வாரம் இடம்பெற்றது.

இதன்போது அவர் இந்திய வெளியுறவு செயலாளர் சுஜாதாசிங்கை சந்தித்தார்.

இலங்கை விடயம் தொடர்பில் இரண்டு நாடுகளுமே இலங்கை அரசாங்கம் தமிழர் தொடர்பில் உரிய தீர்வுகளை வழங்கவில்லை என்பதை இதன் போது ஏற்றுக்கொண்டன.

அத்துடன் ஒரு குடும்ப ஆட்சிமுறையால் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமையையும் இரண்டு நாட்டு அதிகாரிளும் ஏற்றுக்கொண்டனர்.

எனினும் ராஜபக்ச அரசாங்கம் பாரிய போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக அமரிக்கா சுட்டிக்காட்டிய போதும் இந்திய தரப்பில் அதற்கு மாற்றுக் கருத்தே வெளிப்படுத்தப்பட்டது.

சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டு வந்துள்ள பிரேரணைக்கு ஆதரவை வழங்கவேண்டும் என்று பிஷ்வால் கோரிய போதும் இந்தியா அதற்கு உடனடியான பதிலை வழங்கவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.