மாகாணசபைத் தேர்தல்களில் உளவுப் பணிகளில் அமெரிக்கா

Written by vinni   // March 10, 2014   //

sri-lanka-and-USAஇலங்கையில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களில் அமெரிக்கா உளவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா உளவுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் இந்த உளவுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கத் தூதரகம் 1500 அதி நவீன தொலைபேசிகள் மற்றும் 1500 கமராக்களை தருவித்துள்ளது.

தேர்தல் கண்காணிப்பு என்ற போர்வையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இது தொடர்பில் தேர்தல் செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.

அதி நவீன தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்தி உளவுப் பணிகளில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சாதனங்களை யார் பயன்படுத்துகின்றார்கள் என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Similar posts

Comments are closed.