மலேசிய விமானத்தில் பயணம் செய்த கனடிய தமிழரின் கதி என்ன? திடுக்கிடும் தகவல்

Written by vinni   // March 10, 2014   //

safe_imageநேற்று முன் தினம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங்கிற்கு சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி வியட்நாம் கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேர் பலியானதாக அஞ்சப்படும் வேளையில் இந்த விமானத்தில் இரண்டு கனடா நாட்டை சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளார்கள் என்று தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 இந்தியாவை பிறப்பிடமாக கொண்டு கனடாவில் வாழ்ந்து வந்த முகேஷ் முகர்ஜியும் அவருடைய மனைவி Xiaomo Bai அவர்களும் இந்த விமானத்தில் பயணம் செய்தார்கள் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. முகேஷ் முகர்ஜி, தமிழகத்தை சேர்ந்த மோகன் குமாரமங்கலம் அவர்களுடைய பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன் குமாரமங்கலம பாண்டிச்சேரி தொகுதியில் இருந்து கடந்த 1970ஆம் ஆண்டு எம்.பியாக பணிபுரிந்தவர்.

 முகேஷ் முகர்ஜி கனடாவில் உள்ள சுரங்கத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் தொழில் விஷயமாக தனது மனைவியுடன் சீனாவிற்கு செல்லும் வழியில்தான் விமானம் மாயமாகி உள்ளது. முகேஷ் முகர்ஜியின் Xiaomo Bai என்ற சீனப்பெண்ணை காதலித்து திருமணம் செய்தவர்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். முகேஷ் முகர்ஜியின் தாத்தா மோகன் குமாரமங்கலம் அவர்களும் டெல்லியில் நடந்த விமான விபத்து ஒன்றில் பலியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.