விடுதலைப் புலிகளை உருவாக்கினார் இந்திரா காந்தி – ராம் ஜெட்மலானி

Written by vinni   // March 10, 2014   //

download (1)தமிழீழ விடுதலைப் புலிகளை, முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியே உருவாக்கினார் என முன்னாள் மத்திய அமைச்;சர் ராம் ஜெட்மலானி தெரிவித்துள்ளார். இந்தியாவின் தேவைகக்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1987ம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கையானது, இந்தியாவிற்கு நன்மைகளை ஏற்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவின் நலன்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்திரா காந்தி புலிகளை உருவாக்கினார் என தெரிவித்துள்ளார்.

இந்திய உளவுப் பிரிவான றோவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையில் தனது இருப்பினை உறுதி செய்து கொண்ட காலத்தில், இந்தியாவின் இருப்பினை உறுதி செய்யும் நோக்கில் புலிகள் உருவாக்கப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை இந்திய உடன்படிக்கை இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் படுகொலையுடன் தொடர்புடைய கைதிகளை விடுதலை செய்ய ஜெயலலிதா எடுத்தத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மரண தண்டனையை தாம் எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.