யுத்தத்தில் காணாமற் போனோருக்கு மரணச் சான்றிதழுக்கு பதிலாக இல்லாமல் போனோர் சான்றிதழ்

Written by vinni   // March 9, 2014   //

downloadயுத்தத்தில் காணாமற் போனோருக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதற்குப் பதிலாகஇல்லாமல் போனோர் (CERTIFICATE OF ABSENT) என்ற சான்றிதழை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காணாமற் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் அத்துகோரள தெரிவித்தார்.

காணாமற் போனோரின் உறவினர்கள் தமது உறவுகள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர். இவர்கள் மரணச் சான்றிதழ் பெறுவதால் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, மரணச் சான்றிதழுக்குப் பதிலாக இல்லாமல் போனோர் என்ற சான்றிதழை வழங்க அரசுக்கு சிபாரிசு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் அத்துக்கோறள தெரிவித்தார்.

மரணச் சான்றிதழைப் போலவே இல்லாமல் போனோர் சான்றிதழ் மூலம் சொ்ததுப் பரிமாற்றம் நிவாரணம், நஷ்டஈடு மற்றும் அரச ஓய்வூதியத்தையும் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்


Similar posts

Comments are closed.