பேஸ்புக் தடை குற்றச்சாட்டுக்கள் சூழ்ச்சித் திட்டமாகும் – ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

Written by vinni   // March 9, 2014   //

facebookபேஸ்புக் தடை செய்யப்பட உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் ஓர் சூழ்ச்சித் திட்டமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு சிலரே இந்த பிரசாரத்தை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு போலிப் பிரசாரம் செய்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களை கிளர்ச்சியடைச் செய்து அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும்.

தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் அரசாங்கம், மக்களின் தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை ஒருபோதும் முடக்காது.

தொழில்நுட்ப பயன்பாட்டின் போது எவ்வாறான கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி மாணவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை தெளிவுபடுத்த வேண்டும்.

மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஆயிரம் நெணசல கணனி மையங்கள் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்


Similar posts

Comments are closed.