நவநீதம்பிள்ளை, என்னை சந்திக்கவில்லை!- டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு

Written by vinni   // March 9, 2014   //

dougஇலங்கை விஜயத்தின் போது தம்மைச் சந்திக்கவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீது இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கில் தற்போதும் இடம்பெறுகின்ற குற்றங்களுக்கு ஈபிடிபி மீதும் நவநீதம்பிள்ளை குற்றம் சுமத்தியிருந்தார். இது, தமது கட்சியின் நலனைப் பாதிக்கும் என்று அமைச்சர் டக்ளஸ் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றங்களை மேற்கொள்வது தமது கட்சியின் கொள்கையல்ல. வேறு கட்சிகள் குற்றங்களில் ஈடுபட்டால் கூட அதற்கான குற்றச்சாட்டு ஈபிடிபியின் மீதே சுமத்தப்படுகிறது என்று அமைச்சர் இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது நவநீதம்பிள்ளையின் விடுதலைப்புலிகள் மீதான பக்கசார்பான பக்கத்தையே காட்டுவதாக டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சர்வதேச தமிழர்களின் கருத்துக்களுக்கு நவநீதம்பிள்ளை முன்னுரிமை வழங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.