HP அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் டேப்லட்

Written by vinni   // March 8, 2014   //

hp-8கணனி மற்றும் டேப்லட் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனமான HP கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

HP 8 1401 எனும் இந்த டேப்லட் ஆனது 7.85 அங்குல அளவு, 1024 x 768 Pixel Resolution உயைட தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் Allwinner A31 ARM Cortex A7 Quad Core Processor, பிரதான நினைவகமாக 1GB RAM மற்றும் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவு என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் 2 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 0.3 மொகபிக்சலை உடைய கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

இதன் விலையானது 169.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.


Similar posts

Comments are closed.