மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதை குழி தோண்டும் விவகாரமும் புதை குழியில் போடப்பட்டதேன்?

Written by vinni   // March 8, 2014   //

Thiru Ke1_CIமன்னார் திருக்கேதீஸ்வர மனித புதை குழி விவகாரமானது பலதிருப்பங்களையும் ஆச்சரியங்களையும் ஏற்படுத்தி பாரிய விவகாரமாக வந்து கொண்டிருந்த வேளை மேலும் அகலப்படுத்தப்பட்டு புதைகுழி தோண்டப்படும் என கூறிய வேளை திடீர் என அது நிறுத்தப்பட்டு புதை குழி தோண்டும் விவகாரமும் புதை குழியில் போடப்பட்டதேன்? என கேள்வி எழுப்பியுள்ளார்

ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும், கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், வீடமைப்பு நிலையியல் குழு தலைவரும், தேர்தல் பரப்புரை ஒருங்கிணைப்பாளருமான சி. பாஸ்க்கரா கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து எமது தமிழ் சிபான்மை மக்களின் உரிமை, உணர்வுகளுக்காக குரல் கொடுக்கும் சக்திகளின் பலம் மேலும் மேலும் வலுப்பெறாத போது மலையக மக்களின் வாழ்வாதார உரிமை பிரச்சினைகள் மூடிமறைக்கப்படும் நிலையே வடகிழக்கு மத்திய மாகாணத்திலும் ஏற்படும் என்றார்.

வடகிழக்கு மாகாண மக்கள் ஆணித்தரமான ஆதரவு மூலம் வடமாகாணசபை வெற்றி பெறவைத்து அச்சபை மூலமும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமும் உரத்து குரல் கொடுத்த காரணத்தினாலேயே மன்னார் புதை குழி விவகாரம் உடனடியாக புதைக்கப்படாமல் தோண்டப்பட்டது இப்படி இருந்தும் முக்கிய ஜெனிவா சம்பந்தமாக தமிழ் தலைவர்களின் கவனம் திரும்பிய நேரம் சத்தம் இல்லாமல் மன்னார் புதைகுழி தோண்டல் மூடிமறைக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளதானது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாததும் தமிழ் மக்கள் மேலும் பலம் பொருந்திய சக்தியாகவும் உரத்து குரல் கொடுக்கும் சக்தியாகவும் மேலும் மேலும் பரிணமிக்க வேண்டிய காலம் இது என மீண்டும் கட்டியம் கூறுவதாக உள்ளது. மலையக மக்களின் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தும் கூட அங்கு அரசு, அரசு சார்பான கட்சிகளாக உள்ள காரணத்தால் மலையக மக்களின் குரல் வெளிவருவதில்லை ஆனால் இங்கு நிலமை அப்படி இல்லையாயினும் கூட அரசு தனது சதித்தனத்தை காட்டி மூடி மறைக்கும் செயலானது தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு, மத்தி மலையகம் என ஒன்று சேர்ந்து சோரம் போகாத தலைமைகளை ஆதரித்து உரிமைகள் உணர்வுகளை வென்றெடுக்க வேண்டும் என்பது காலத்தின் தேவை என தெரிவித்தார்.

வடகிழக்கு மக்களின் இவ்வளவு பலம் பொருந்திய சக்தியாக உரத்து குரல் கொடுக்கும் சக்தியாக பரிணமித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ள வேளையில் கூட அரசின் மூடி மறைப்பு இவ்வளவு இருக்குமாயின் அரச அரசு சார்பு கட்சிகளின் கையில் உள்ள பகுதிகளில் சிறுபாண்மை இன மக்களின் நிலை என்னவாக இருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியாத நிலையாகவே உள்ளது


Similar posts

Comments are closed.