ஐ.நா நோக்கி செல்லும் நீதிக்கான தமிழ்ச் சிற்றூர்தி சுவிஸ் நாட்டை வந்தடைந்தது

Written by vinni   // March 8, 2014   //

tamil_van_swiss_001-450x260ஐ.நா நோக்கி செல்லும் நீதிக்கான தமிழ்ச் சிற்றூர்தி கடந்த இரு நாட்களாக யேர்மன் Landau மற்றும் Stuttgart நகரங்களை கடந்து நேற்றைய தினம் சுவிஸ் நாட்டை வந்தடைந்தது.

நேற்று மாலை தமிழின அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் தமிழ்ச் சிற்றூர்தி பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் நடைபயணத்தை மேற்கொள்ளும் உறவுகளுடன் இணைந்தனர்.

இன்றைய தினம் தமிழ் சிற்றூர்த்தி சுவிஸ் Basel மற்றும் Zürich நகரங்களில் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பால் நடாத்தப்படும் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்துகொண்டு அங்கு கண்காட்சி அமைத்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க இருக்கின்றனர்.

நாம் பிறந்த மண்ணை நாம் வளர்ந்த மண்ணை நாங்கள் நேசிக்கின்ற எங்கள் தாய் மண்ணை ஆக்கிரமித்து எம் மக்களை அடிமைப்படுத்தி அராஜகம் புரிகின்ற சிங்கள அரசை தமிழீழ மக்கள் எதிர்க்கின்றனர்.

அடியோடு வெறுக்கின்றனர் என்பதை உலகறிய எம்மினத்தால் நடாத்தப்படும் அரசியல் போராட்டத்தில் கலந்துகொண்டு மாவீரர்களின் தியாகத்தை இதயத்தில் இருத்தி அவர்கள் சிந்திய இரத்தத்திற்கு மதிப்பளித்து அவர்கள் கனவை நினைவாக்குவதே தமிழ்மக்களாகிய எம் தலையாய கடமை என உறுதியெடுத்து எதிர்வரும் 10 ம் திகதி அனைத்து உறவுகளும் கலந்துகொள்ள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Similar posts

Comments are closed.