அமெரிக்க அதிபர்களிலே ஒபாமா தான் மோசமான அதிபர் – பாபி ஜிண்டால்

Written by vinni   // March 8, 2014   //

downloadஅமெரிக்காவிலுள்ள லூசியா மாகாணத்தின் கவர்னராக இருப்பவர் பாபி ஜிண்டால். இவர் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவராவார். தற்போது அமெரிக்க குடியரசு கட்சியில் இருக்கும் இவர் வருகின்ற அதிபர் தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாபி ஜிண்டால் பேசுகையில் “என் வாழ்நாளில் நான் கண்ட அமெரிக்க அதிபர்களிலே ஒபாமா தான் மோசமான அதிபர். அமெரிக்க அரசு தனது நிலைத்தன்மையை இழந்துவிட்டது.

தனக்கு ஒழுங்காக சட்டத்தைப் பற்றி கற்றுத்தராத ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்திடம் இருந்து அவர் தான் கட்டிய கட்டணத்தை திருப்பி தரச் சொல்லி வழக்குத்தொடுக்கலாம் என்பதை அவருக்குச் சொல்ல விரும்புகிறேன்.

அமெரிக்க வரலாற்றின் எந்தவொரு பிரதமருடனும் ஒபாமாவை ஒப்பிடமுடியாது. முன்னாள் பிரதமரான கார்டர் தான் மோசமான பிரதமர் என்று இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் ஒபாமா நான் நினைத்தது தவறு என்று நிரூபித்து விட்டார்” என்று கூறினார்.


Similar posts

Comments are closed.