காணாமல் போன‌ மலேசிய விமானம் கடலில் விழுந்தது: 239 பேர் கதி என்ன?

Written by vinni   // March 8, 2014   //

628x471மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் இன்று அதிகாலை புறப்பட்டது.

காலை 6.30 மணியளவில் பீஜிங் சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த விமானம் புறப்பட்டு சென்ற சுமார் 2 மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது.

இதனால் பதற்றமடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த விமானம் தொடர்பு எல்லைக்குள் இருந்து மாயமாகி விட்டதாக அறிவித்தனர்.

அந்த விமானத்தில் 152 சீனர்கள் மற்றும் ஒரு குழந்தை, 38 மலேசிய நாட்டினர், இந்தோனேசியாவை சேர்ந்த 12 பேர், ஆஸ்திரேலியா-7, பிரான்ஸ்-3, 3 அமெரிக்கர்கள் மற்றும் ஒரு குழந்தை, நியூசிலாந்து-2, உக்ரைன்-2, கனடா-2, ரஷ்யா, இத்தாலி, தைவான், நெதர்லாந்து, ஆஸ்திரியா நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என 2 குழந்தைகள் உள்பட 227 பயணிகள், 12 பணியாளர்கள் என மொத்தம் 239 பேர் இருந்ததாக மலேசியன் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.

வியட்நாம் கடல் எல்லைக்கு மேலே பறந்த போது விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் சர்வதேச விமானக் குழுமம் சிறிய விமானங்களை அனுப்பி அப்பகுதியில் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையில், வியட்நாமின் தோ சூ தீவில் இருந்து 153 தொலைவில் உள்ள தென் சீனக் கடலுக்குள் அந்த விமானம் விழுந்து விட்டதாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், விமானத்தில் இருந்த 239 பயணிகளின் கதி என்ன ஆயிற்று? என்ற அச்சமும், கவலையும் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் பிராத்தனை செய்து வருகின்றனர். கடலுக்குள் தேடுதல் வேட்டை நடத்த கடலோர காவல்படை படகுகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு வியட்நாம் அரசு அறிவுறுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.